காஷ்மீரில் லஷ்கர்- இ தயீபா இயக்கத்தின் முக்கியத் தளபதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்தனர்.
டார்கைன் மலைப் பகுதியில் நேற்று நடந்த மோதலில் அப்ரார் அகமது எனும் அபு உபைத் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவர் லஷ்கர்- இ தயீபா இயக்கத்தின் ராஜூரி மாவட்டத் தலைவராகச் செயல்பட்டு வந்ததாகவும் ஜம்மு மாவட்ட காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும். காஷ்மீரில் நடந்த ஏராளமான குண்டு வெடிப்புகளில் அப்ரார் அகமதுவிற்கு நேரடித் தொடர்புள்ளது என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.