உழைக்கும் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளில் பணிபுரியும் பிற பணியாளர்களின் அடிப்படை சம்பளத்தை 30 சதவிகிதம் தற்காலிகமாக கூட்டுவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தகவல், ஒளிபரப்பு அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.
புதிய ஊதியம் விகிதத்தை இந்த ஆண்டு ஜனவரி 8 முதல் அனைத்து பத்திரிகை நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.