வடக்கு அஸ்ஸாமில் வங்க தேசத்தில் இருந்து குடியேறியுள்ள முஸ்ஸீம்களுக்கும், போடோ பழங்குடியினருக்கும் இடையே நடந்துவரும் மதக் கலவரத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
குப்திபாரி, சோனாபாரி, ஜார்கோவான் ஆகிய இடங்களில் நீடித்துவரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அம்மாநில காவல் துறை பேச்சாளர் பாஸ்கர் ஜே. மஹன்டா, பாதுகாப்பு கருதி தேச நெடுஞ்சாலை எண் 52இல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உடால்கிரி மாவட்டத்தில் போடா பழங்குடியினர் சிலரை சில முஸ்ஸீம்கள் அம்புகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதைத் தொடர்ந்து நேற்று காலை இந்த கலவரம் வெடித்ததாகக் கூறிய மஹன்டா, 50க்கும் மேற்பட்ட முஸ்ஸீம்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதாகக் கூறினார்.
ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தற்பொழுது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மஹன்டா கூறியுள்ளார்.