இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ஐ.சி.எம்.ஆர்) பணியாற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வு பெறும் வயது 60இல் இருந்து 62 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் குழு இன்று இதற்கு ஒப்புதல் அளித்தது.
அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளின் சேவையை தக்கவைத்துக் கொள்ளவும், திறமை வாய்ந்த விஞ்ஞானிகளை மருத்துவக் கழகத்தில் இணையச் செய்வதற்கும், நாட்டில் மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கவும் இத்தீர்மானம் வழிவகுக்கும்.