Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை‌க்கான உ‌ச்சவர‌ம்பு அதிகரிப்பு!

Advertiesment
போனஸ் மத்திய அமைச்சரவை ரயில்வே
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகைக்கான உச்சவரம்பு ரூ.2,500இ‌லஇருந்து ரூ.3,500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 1.4.2006 முதல் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அமைச்சரவைக் குழு இன்று இதற்கான ஒப்புதலை அளித்தது.

இதன்படி 2006-07 மற்றும் 2007-08 ஆகிய இரண்டாண்டுகளுக்கான போனஸ் தொகை, உச்சவரம்பான ரூ.3,500-ன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படவுள்ளது.

ரயில்வேப் பணியாளர்களுக்கு 2007-08ஆ‌ம் ஆண்டுக்கான போனஸ் தொகையாக 73 நாட்களுக்கான ஊதியம் அளிக்கப்படவுள்ளது. போனஸ் தொகைக்கான உச்சவரம்பு ரயில்வேப் பணியாளர்களுக்கும் பொருந்தும். இதனா‌ல் சுமா‌ர் 13.25 ல‌ட்ச‌ம் குரூ‌ப் ‌பி,‌சி, ம‌ற்று‌ம் டி தொ‌ழிலாள‌ர்க‌ள் பயனடைவா‌ர்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil