Publish Date: Fri, 03 Oct 2008 (13:10 IST)
Updated Date: Fri, 03 Oct 2008 (13:09 IST)
இந்தியாவில் அண்மையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், முக்கிய குற்றவாளியுமான இந்தியன் முஜாகிதீன் (IM) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி அபு ரஷீத்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அவனது சொந்த ஊரானா அஜம்கரில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
மும்பை குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினரும், உத்தரப்பிரதேசம் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவினரும் கூட்டாக இணைந்து தீவிரவாதி ரஷீத்தை தேடி வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் அபு ரஷீத்துக்கு தொடர் குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
2005ஆம் ஆண்டு முதல் அண்மையில் டெல்லி, அகமதாபாத் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ரஷீத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.