Newsworld News National 0810 03 1081003032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தசரா பண்டிகையன்று குண்டு வைக்க சதி: மங்களூரில் பயங்கரவாதி உட்பட 11 பேர் கைது!

Advertiesment
பயங்கரவாதம் தசரா பண்டிகையன்று குண்டு வைக்க சதி மங்களூரில் பதுங்கியிருந்த 11 தீவிரவாதிகள் கைது உல்லால்
, வெள்ளி, 3 அக்டோபர் 2008 (13:15 IST)
கர்நாடக மாநிலம் மங்களூரில் தசரா பண்டிகையன்று குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியிருந்த பயங்கரவாதியையும், அவனோடு தங்கியிருந்த மேலும் 10 பேரையும் கர்நாடக, மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மங்களூர் நகரின் உல்லால் என்ற பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த இவர்களை இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடத்திய அதிரடி நடவடிக்கையில் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெடிப்பொருட்களும், நேர வெடிகுண்டை இயக்கி வெடிக்கச் செய்யும் கருவிகளும், சில கோயில்கள், கட்டடஙகளின் வரைபடங்களும், கணினி குறுந்தகடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதி பல்வேறு குண்டு வெடிப்புக்களில் தொடர்புடையவன் என்று மங்களூரில் இருந்து நமக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. இணையத்தின் வாயிலாக இவர்கள் தகவல்களை பரிமாரிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதியுடமும், அவனுக்கு அடைக்கலம் கொண்டுத்ததாக மற்ற 10 பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று மாலை கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் இது குறித்து காவல்துறையினர் தகவல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil