Publish Date: Fri, 03 Oct 2008 (12:14 IST)
Updated Date: Fri, 03 Oct 2008 (12:13 IST)
கர்நாடக மாநிலம் மங்களூரில் காவல்துறையினர் இன்று நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அண்மையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்களூரில் தீவிரவாதிகள் சிலர் புகுந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் கைது செய்யும் பொருட்டு, நக்சல்களுக்கு எதிரான சிறப்பு படையினரும், காவல்துறையினரும் இணைந்து இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில், சதி வேலைகளில் ஈடுபடவும், வெடிபொருட்களை விநியோகம் செய்யவும் திட்டமிட்டிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் மங்களூரைச் சேர்ந்தவர்கள் மற்ற இருவர்கள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.