முறையான ஆவணங்கள் இல்லாமல், ஆவணங்களைச் சரிபார்க்காமல் சிம் கார்டுகளை வழங்கினால் தொலைபேசி முகவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
முகவரி உள்ளிட்ட விவரங்களுக்கான ஆவணங்களைச் சரிபார்க்காமல் செல்பேசிகளுக்கான சிம் கார்டுகளை வழங்கக் கூடாது என்றும், சிம் கார்டுகளை மொத்தமாக வழங்கக் கூடாது என்றும் தொலைபேசி நிறுவன முகவர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் தீவிரவாதிகள் பயன்படுத்திய சிம் கார்டுகளின் ஆவணங்களைச் சரிபார்த்தபோது அவை போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்டது தெரியவந்தது.
இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்புகளுக்கு "பாஸ்வேர்ட்' பயன்படுத்துவது இனி கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார். பாஸ்வேர்ட் இல்லாத வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்புகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றார் அவர்.