Publish Date: Wed, 01 Oct 2008 (19:08 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (19:07 IST)
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளை அடுத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை மறைமுகமாக மறுத்த பிரதமர் மன்மோகன் சிங், இந்தப் பிரச்சனை தனிநபர் சார்ந்ததல்ல என்றார்.
பிரான்சில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "பயங்கரவாதத் தாக்குதல்கள் தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல. பயங்கரவாதத்தை முறியடிக்க நாம் வைத்துள்ள அமைப்பு சார்ந்தது. பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக நாம் வைத்துள்ள பல்வேறு அமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.
அது பிரதமரின் தனித்த உரிமையல்லவா என்று கேட்டதற்கு, "உண்மைதான். அது எனது உரிமைதான். ஆனால் நமது நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டே நான் முடிவெடுப்பேன்." என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
அமைச்சரவை விரிவாக்கம் பற்றிக் கேட்டதற்கு, அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரியவரும் என்றார் அவர்.