Publish Date: Wed, 01 Oct 2008 (18:00 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (17:46 IST)
மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாந்த்ரா புறகநரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம தொலைபேசி ஒன்று காவல்துறையினருக்கு வந்தது.
இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் நீதிமன்றத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களை வெளியேற்றி விட்டு தீவிர சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில், தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பையடுத்து இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் மர்ம தொலைபேசிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.