ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் புதிதாக நடந்த கலவரங்களைத் தொடர்ந்து பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
கலவரம் தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணைத் தலைமை ஆய்வாளர் ஆர்.பி. கோசே கூறியுள்ளார் என்று பிடிஐ நிறுவனம் தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உள்ளனரா என்று கேட்டதற்கு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் இந்த இயக்கங்களைச் சேர்ந்த 2 தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளது.
ருடங்கியா, கடகுடா, டெலிங்கியா கிராமங்களில் நேற்று நடந்த கலவரத்தைத் தொடர்ந்து கலவரக்காரர்களைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக, பதற்றம் நிறைந்த 9 பகுதிகளில் 24 ம ணிநேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரிஷன் குமார் தெரிவித்துள்ளார்.