Publish Date: Tue, 30 Sep 2008 (20:59 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (20:59 IST)
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் நடத்திவரும் போராட்டத்தால் சிங்கூரில் தடைப்பட்டுள்ள நானோ கார் தொழிற்சாலை திட்டம் பற்றி மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுடன் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா அக்டோபர் 3 ஆம் தேதி விவாதிக்கவுள்ளார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புத்ததேவ் பட்டாச்சார்யாவிடம், கடந்த ஒரு மாதமாகக் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நானோ கார் தொழிற்சாலைத் திட்டம் நிறைவேறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டாடாவிற்கு மேற்கு வங்க அரசு உறுதியளித்துள்ளது பற்றிக் கேட்டதற்கு, "நானோ கார் தொழிற்சாலைத் திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் பற்றிய எல்லா அம்சங்கள் குறித்தும் டாடாவுடன் நான் விவாதிப்பேன்" என்றார்.
நானோ கார் தொழிற்சாலைத் திட்டம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று புத்ததேவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுதியுள்ள கடிதத்திற்கு டாடா பதிலளித்துள்ளார்.
Webdunia
Publish Date: Tue, 30 Sep 2008 (20:59 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (20:59 IST)