ஒரிசாவில் கலவரத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள கந்தாமல் மாவட்டத்தில் மீண்டும் நடந்த மோதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.
உதயகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ருடாங்கியா கிராமத்திற்குள் இன்று அதிகாலை ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், அந்தக் கிராமத்து மக்களை கடுமையாகத் தாக்கியது. அவர்களை எதிர்த்து கிராம மக்கள் போராடியுள்ளனர். இதனால் வலுவிழந்த அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது என்று கந்தாமல் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் குமார் தெரிவித்தார்.
இந்த மோதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோதல் நடந்துள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுவதையடுத்து காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.