குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 17 வெடிகுண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கலுபுர்தர்வஜா என்ற இடத்துக்கு அருகே ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெடி குண்டுகள் சக்தி வாய்ந்தவை என்றும் ஆனால் சரியாக செய்யப்படாதவை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த வெடிகுண்டுகளை, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். இந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அகமதாபாத் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதோடு, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத்தில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி 17 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 55 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.