பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 29ஆம் தேதி மேகாலய மாநிலத்துக்கு வரும் அத்வானி கொல்லப்படுவார் என்று இந்தியன் முஜாஹிதின் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் (இ-மெயில்) அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, அம்மாநில காவல் துறையினர் இணையதள மையங்களில் தீவிர விசாரணை நடத்தியதில், லாபன் என்ற இடத்தைச் சேர்ந்த மொமினுல் ஹக் (30) சட்டகல்லூரி மாணவரை நேற்றிரவு கைது செய்தனர்.
ஷில்லாங்கில் உள்ள ஒரு இணையதள மையத்தில் இருந்து இந்த மின்னஞ்சல் அனுப்பியதை மொமினுல் ஹக் ஒப்புக்கொண்டார்.
இவருக்கு இந்தியன் முஜாஹிதின் தீவிரவாத இயக்கத்துடன் உள்ள தொடர்பு குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.