Publish Date: Fri, 26 Sep 2008 (18:43 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (18:43 IST)
அஸ்ஸாம் மாநிலம் தூப்ரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாஸ்பரி பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதையடுத்து ராணுவத்தினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளிடமிருந்த 4 துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
Webdunia
Publish Date: Fri, 26 Sep 2008 (18:43 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (18:43 IST)