மராட்டிய மாநிலத்தில் கயேர்லாஞ்சி என்ற இடத்தில் 4 பேர் கொண்ட தலித் குடும்பம் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பந்தரா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என்று செப்டம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரபாகர் மண்ட்லேகர், ஜெகதீஷ் மண்ட்லேகர், ராமு தாண்டே, விஸ்வநாத் தாண்டே, சக்ரு பிஞ்ஜெவார் ஆகிய 6 பேரும் தூக்குத் தண்டனை பெற்றவர்களாவர்.
கோபால் பிஞ்ஜெவார், ஷிஸ்பல் தாண்டே ஆகிய இருவரும் ஆயுள் தண்டனை பெற்றவர்களாவர்.
இந்தத் தீர்ப்பு குறித்துத் திருப்தி தெரிவித்துள்ள மத்தியப் புலனாய்வுக் கழக வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், தலித்துகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைத்துச் சமூகத்தில் நல்லிணக்கத்தை வளர்க்க இதுபோன்ற தீர்ப்புக்கள் உதவும் என்றார்.