காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலரான ராகுல்காந்தி, தாம் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, பத்தின்டா மாவட்டத்தில் இன்று நடந்த பேரணியில் பங்கேற்றார்.
அம்மாநில பஞ்சாயத்து தேர்தலின் போது நடந்த வன்முறையில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், புதுடெல்லி திரும்பியதும் அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற முயற்சி மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.
பின்னர் பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்ற ராகுல்காந்தியிடம், எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல், கால அவகாசம் எதையும் குறிப்பிடாமல், விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.