பாராளுமன்ற, சட்டமன்ற, பஞ்சாயத்துத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பது ஒரு சாத்தியமில்லாத கனவு ஆனால் அரசியல் தலைவர்களுக்கு நேரம் இருந்தால் இதை அடைய முடியும் என்றார்.
ஆண்டு முழுவதும் இந்த நாடு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், நாம் எப்படி முன்னேற்றத்தை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அவர் முன்னேற்றம் இடையூறாக இருக்கக் கூடாது என்றார்.
அப்துல்கலாமின் இந்த கருத்தை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் பி.கே. துமல், டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் உள்பட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.