ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அத்து மீறி நுழைந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த கடும் மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
27 மணி நேரமாக நடந்த இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவரும் பலியானார்.
பாகிஸ்தானின் கபரிஸ்தான் பகுதியில் இருந்து ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் கும்பல் ஒன்று நேற்று இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பின்னர், 8 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த சண்டை இன்றும் நீடித்தது.
இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். ராணுவ வீரர் ஒருவரும் பலியானார். கடைசியாக அங்கிருந்து கிடைத்த தகவல் படி இந்த துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.