Publish Date: Mon, 22 Sep 2008 (14:07 IST)
Updated Date: Mon, 22 Sep 2008 (14:06 IST)
தனது மூன்று நாள் பஞ்சாப் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பொற்கோவில், ஜாலியன்வாலாபாக் ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, 'இந்தியாவைத் தேடி' என்ற கோஷத்துடன் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே கர்நாடகா, ஒரிசா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பயணத்தை நிறைவு செய்துள்ள அவர், தனது 3 நாள் பஞ்சாப் பயணத்தை இன்று தொடங்குகிறார். இந்தப் பயணத்தின்போது இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.
சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலுக்குச் செல்லவும் ராகுல் திட்டமிட்டுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜாலியான்வாலாபாக், லாங்கார், துகியானா கோயில் ஆகிய இடங்களுக்கும் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.
பஞ்சாப் பயணம் மேற்கொள்ளும் ராகுலுக்கு பாதுகாப்பு பலப்படத்தப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனித இடஙளுக்கு செல்லும்போது 'சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு' பணியாளர்களும் ராகுலின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்.