டெல்லியில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட வங்கதேசத்தை சேர்ந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 24 பேர் பலியானார்கள். இதையடுத்து டெல்லியில் அனுமதியின்றி தங்கியிருப்பவர்களை வெளியேற்றும் பணியை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியின் கிழக்குப் பகுதியான கல்யான்புரியில் காவல் துறையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அனுமதியின்றி தங்கியிருந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் 10 பெண்களும், 11 குழந்தைகளும் அடங்குவர்.