Publish Date: Sat, 20 Sep 2008 (20:27 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (20:27 IST)
கர்நாடகாவைத் தொடர்ந்து கேரளாவிலும் வடமேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது!
கேரளாவின் பெரும்பாலான பகுதிகளிலும், கர்நாடக கரையோரப் பகுதிகளில் பல இடங்களிலும், ராயலசீமா கர்நாடகாவின் தெற்குப் பகுதிகளில் சில இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திராவின் கரையோரப் பகுதி, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் அதிகமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 48 மணிநேரத்தில் கேரளா, கர்நாடகாவின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் லட்சத்தீவின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Sat, 20 Sep 2008 (20:27 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (20:27 IST)