சுய உதவி குழுக்களுக்கான (SHGs) தேசிய கூட்டமைப்பு ஒன்றை அமைக்க மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டமைப்பின் தலைவராக மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத்தும், கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் செயலர் மற்றும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், திரிபுரா, ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற மேம்பாட்டுக்கான மாநில செயலர்கள் இதன் உறுப்பினர்களாகவும் இருப்பர்.
நபார்டு தலைமை பொது மேலாளர் ஏ. ராமநாதன் இந்த கூட்டமைப்பின் உறுப்பினராகவும், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சக இணைச் செயலர் அமர் சிங் உறுப்பினர் செயலராகவும் இருப்பார்கள்.
மேலும், ஆர்.கே. மிஷன், மிரடா (MYRADA), தான் பவுண்டேஷன், சேவா (SEWA), நிரண்டெர் (Niranter) ஆகிய அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஒவ்வொரு மாநில சுய உதவி குழு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளும் இதன் உறுப்பினர்களாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதைத்தவிர, மேலும் பல சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.