வடக்கு காஷ்மீரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து வெடி குண்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தில் மகம் எனப்படும் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். மரங்கள், புதர்கள் நிறைந்த அடர்ந்த காட்டிற்குள் நீண்ட நேரம் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிரவாதிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் அந்தக் குழிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 கையெறி குண்டுகள், 10 எரிகணைகள், ஒரு பீரங்கி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் உடனடியாக அழிக்கப்பட்டது என்று பாதுகாப்புப் படை செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.