பீகார் மாநிலம் பகல்பூரில் இருந்து சூரத் நோக்கிச் சென்று கொண்டிருந்த தப்தி கங்கா விரைவு ரயிலின் பார்சல் பெட்டியில் நேற்று நள்ளிரவு தீடீரென தீப்பிடித்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.
சங்கர்கர் என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்த போது பார்சல் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ரயில் உடனே நிறுத்தப்பட்டு ரயிலில் இருந்து அந்த பெட்டி கழற்றி விடப்பட்டது.
இதற்கிடையே, இது பற்றி தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்து பயணிகளுடன் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் பார்சல் பெட்டியில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.
இந்த திடீர் தீவிபத்தால் அலகாபாத் - மும்பை பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.