அயல்நாட்டு இதழ்களின் இந்திய பதிப்பில், நம்நாட்டின் பொதுவான செய்திகளையும், கருத்துக்களையும் வரைமுறைகளுடன் வெளியிட அனுமதிக்கும் வகையில், பத்திரிக்கைக் கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
பத்திரிக்கைத் துறை நிர்வாகம் அனுமதி அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்ட விவரங்கள் வருமாறு :
வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ள அயல்நாட்டு இதழ்களின் இந்திய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956ன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்.
அயல்நாட்டு இதழ் நிறுவனங்களின் முதலாளிகளுடன் இந்திய நிறுவனங்கள் நிதி உடன்படிக்கைகளை செய்துகொள்ளலாம் (உதாரணம் ராயல்டி போன்றவை)
நிர்வாக இயக்குனர்களில் நான்கில் மூன்று பேர் இந்திய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முக்கிய நிர்வாகிகள், செய்தி பிரிவு ஊழியர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும்.
இந்திய செய்தித்தாள் பதிவேட்டில் இதழின் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதழில் வெளியாகும் தகவல்கள் 100 விழுக்காடு அந்த நாளிதழின் அயல்நாட்டு வெளியீட்டில் உள்ளது போன்றே இருக்கவேண்டும். உள்நாட்டு தகவல்களை சேர்க்க இந்திய வெளீயிட்டிற்கு அனுமதி உண்டு. மேலும் விளம்பரங்களை சேர்க்கவும் அனுமதி உண்டு.
தங்கள் சொந்த நாட்டில் பதிக்கப்படும் அயல்நாட்டு பத்திரிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
மேலும் அங்கு தொடர்ந்து 5 வருடங்கள் பதிப்புகள் வெளிவந்திருக்க வேண்டும். அவ்வாறு வெளியிட்ட பதிப்புகள் கடந்த நிதியாண்டில் 10,000 பிரதிகள் வரை விற்கப்பட்டிருக்க வேண்டும்.