இந்தியாவில் 2010 ஆம் ஆண்டுகளில், புகைப் பிடிப்பதால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பலியாகக்கூடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது!
2006-07இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 57 விழுக்காடு ஆண்களும், 10.9 விழுக்காடு பெண்களும் புகையிலையை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றனர்.
உலக இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு 2006-இன் படி,
13-15 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 14 விழுக்காட்டினர் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
15 விழுக்காடு புகை பிடிக்காதவர்கள் அடுத்த ஆண்டிலேயே புகை பிடிக்க துவங்கிவிடுகின்றனர்.
40 விழுக்காட்டினர் பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர்.
70 விழுக்காடு மாணவர்கள் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனர்.
இங்கிலாந்து நாட்டு மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் 2010-களில், ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகை பிடிப்பதால் இறந்து விடுவார்கள்.
உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் 2030ஆம் ஆண்டில் புகையிலையினால் ஆண்டுதோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்திற்கும் அதிகமாகப் பெருகிவிடும்.