சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs) அடுத்த ஆண்டுக்குள் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு டிசம்பருக்குள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் முதலீடு ரூ.2 கோடியாக அதிகரித்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
புதுடெல்லியில் இன்று சிறப்பு பொருளாதார மண்டல அபிவிருத்தியாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அவர், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், ஏற்றுமதி, முதலீடுகளை ஈர்ப்பது, உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது என்றார்.
நாட்டின் ஏற்றுமதிகளில், ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (EOU), சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்கள் மிக முக்கியமான கருவி என்றும் ஒன்றுக்கொன்று புகழ்ச்சி மிக்கது என்றும் அவர் கூறினார்.