குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுவதாக இருந்த இஃப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் வரும் 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் இஃப்தார் விருந்து அளிப்பதாக இருந்தது.
ஆனால், புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை நடந்த குண்டு வெடிப்பு, பீகாரில் ஏற்பட்ட வெள்ளம் ஆகிய துயர சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இஃப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.