Newsworld News National 0809 16 1080916036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயங்கரவாதத்தை ஒடுக்க தேச அளவில் தனி அமைப்பு: நி.சீ.ஆ.பரிந்துரை!

Advertiesment
பயங்கரவாதத்தை ஒடுக்க தேச அளவில் தனி அமைப்பு நிசீஆபரிந்துரை பயங்கரவாதம் Administrative Reforms Commission – ARC 8வது நிர்வாக சீர்திருத்த ஆணையம் வீரப்ப மொய்லி National security act  NSA
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (14:06 IST)
பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முழுமையாக ஒடுக்க நாடு தழுவிய அளவில் செயல்படக்கூடிய தனித்த புலனாய்வு அமைப்பு உருவாக்க வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்த ஆணையம் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது குறித்து ஆராய்ந்து அது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட 8வது நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission - ARC), மத்திய அரசிற்கு அளித்த பரிந்துரை விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய பரிந்துரைகளின் விவரங்கள் வருமாறு:

1. பயங்கரவாதத்தை ஒடுக்க தேச அளவில் (மத்திய புலனாய்வுக் கழகம் போன்று) தனித்த புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

2. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்கும் வகையில் தனித்த சட்டம் இயற்ற வேண்டும்.

3. தேச பாதுகாப்பு சட்டத்தின் (National security act - NSA) கீழ் கைது செய்யப்படும் எவரும் பிணைய விடுதலை பெற முடியாத வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.

4. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க அதிவேக விசாரணை நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

5. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவ அயல்நாடுகளில் இருந்துவரும் நிதியை தடுத்து நிறுத்த வேண்டும்.

என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசிற்கு நிர்வாக சீர்திருத்த ஆணையம் அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil