அகண்டஅலைவரிசை இணைப்பை மேலும் 1.48 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களுக்கு 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அகண்ட அலைவரிசை (broadband ) வசதியை செய்து தர இருக்கிறது.
தற்போது, 95 விழுக்காடு மாவட்ட தலைமையகங்களுக்கும், சுமார் 44 விழுக்காடு ஒன்றியங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பு தரப்பட்டுள்ளது. இந்த அகண்டஅலைவரிசை இணைப்பை மேலும் 1.48 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது 30,000 கிராமங்கள் மட்டுமே அகண்டஅலைவரிசை இணைப்பு வசதியைப் பெற்றுள்ளது. பி.எஸ்.என்.எல்.-ன் அகண்டஅலைவரிசை இணைப்பு தற்போது 3,261 நகரங்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த வசதி மேலும் 5,000 நகரங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீடிக்கப்பட உள்ளது.