இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சம்பா பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் வடக்கில் 32.4 டிகிரி, கிழக்கில் 76.1 டிகிரி ஆகிய பாகைகளில் அமைந்திருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.