Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி! 80 பேர் காயம்!

Advertiesment
டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி! 80 பேர் காயம்!
, சனி, 13 செப்டம்பர் 2008 (20:29 IST)
தலைநகர் டெல்லியின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து 5 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமுற்றுள்ளனர்.

முதலில் கரோல் பாக்கில் உள்ள கஃபார் சந்தைப் பகுதியில் வெடித்தது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ வாகனத்தில் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஸ் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.

கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளதாக கடைசி செய்திகள் தெரிவிக்கின்றன. இவைகள் தவிர பர்காம்பா சாலையில் குண்டு வெடித்துள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் இராம் மனோகர் லோகியா உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென செய்திகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil