Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் தொட‌ர்‌ந்து 2-வது நாளாக மோத‌ல் ‌நீடி‌ப்பு!

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் தொட‌ர்‌ந்து 2-வது நாளாக மோத‌ல் ‌நீடி‌ப்பு!
, சனி, 13 செப்டம்பர் 2008 (14:12 IST)
காஷ்மீரில் மைசுமா பகு‌தி‌யி‌ல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரு‌ம் மோத‌ல் தொட‌ர்‌ந்து இர‌ண்டாவது நாளாக இ‌ன்று‌‌ம் ‌நீடி‌த்தது.

மைசுமா பகு‌தி‌‌யி‌ல் இரு‌ந்து பேர‌ணியாக செ‌ன்ற ஆ‌ர்ப்பாட்டக்காரர்கள் ப‌ல்வேறு கோஷ‌ங்களை எழு‌ப்‌பியவாறு செ‌ன்றன‌ர். இதையடு‌த்து ம‌த்‌திய கூடுத‌ல் காவ‌ல் படை‌யின‌ர் (CRPF) அவ‌ர்களை‌த் தடு‌த்‌து ‌நிறு‌த்‌தி கலைந்து போகும்படி கேட்டுக் கொண்டனர்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதை ஏற்காமல் கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌பியபடியே பேர‌‌ணியை‌த் தொட‌ர்‌ந்தன‌ர். இதனா‌ல் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, கூட்டத்தை கலைக்கச் செய்ய பாதுகாப்புப் படையினர் தடியடி ‌பிரயோக‌ம் நட‌த்‌தின‌ர். ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌க்கார‌ர்‌க‌ள் காவ‌ல் துறை‌யின‌ர் ‌மீது க‌ல் ‌‌வீ‌சி தா‌‌க்குத‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர் எ‌ன்று அ‌ங்‌கிரு‌ந்து வரு‌ம் தக‌வ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்மோத‌லி‌ல் யாரு‌ம் காயமடை‌ந்ததாக இதுவரை தகவ‌ல் எது‌வு‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் ஆனா‌ல் ஏராளமான ஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌க்கார‌க‌ள் துணை ராணுவ‌ப் படை‌யினரா‌ல் தடியடி‌க்கு ஆளானா‌ர்‌க‌ள் எ‌ன்று‌ம் காவ‌ல் துறை‌யின‌ர் தலை‌யி‌ட்டதா‌ல் ‌நிலைமை க‌ட்டு‌க்கு‌ள் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டதாகவு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்றன.

ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌க்கார‌ர்‌க்ள சுயாட்சி கோரி நே‌ற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப‌ட்டன‌ர். அவர்களை கலைந்து போகும்படி பாதுகாப்புப் படையினர் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதை ஏற்காமல், தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, கூட்டத்தை கலைக்கச் செய்ய பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.

இதையடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் வலுத்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 2பே‌ர் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசிம் மாலிக் உட்பட சுமார் 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத‌ற்கு எ‌‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌‌த்து இ‌ன்று இ‌ந்த பேர‌ணியை நட‌த்‌தியதாக ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌க்கார‌க‌ள் கூ‌‌றின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil