Publish Date: Sat, 13 Sep 2008 (12:17 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (12:16 IST)
புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான அறிக்கை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் காரணமாக, முதலமைச்சர் வைத்திலிங்கம் இன்று காலை புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசும் அவர், புதுச்சேரிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை அளிக்கவுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட மூத்தல் தலைவர்களையும் வைத்திலிங்கம் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பார் எனத் தெரிகிறது.
இதுதவிர இன்று தொடங்கும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் புதுவை முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.
புதுவை முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் அவர் டெல்லி செல்வது இதுவே முதல் முறையாகும்.
Webdunia
Publish Date: Sat, 13 Sep 2008 (12:17 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (12:16 IST)