இந்தியாவில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்தும் பொருட்டு, உயரி எரிபொருள் (Biofuel) மீதான தேசியக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் விலாஸ் முட்டெம்வார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், தேசிய உயிரி எரிபொருள் வழிகாட்டு குழு அமைச்சரவை செயலர் தலைமையில் 'தேசிய உயிரி எரிபொருள் ஒன்று சேர்ப்பு குழு' ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த கொள்கையின் கீழ், 2017ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் உடன் உயிரி எரிபொருளை கலப்பதை (பயோ-எத்தனால், பயோ- டீஸல்) 20 விழுக்காடு உயர்த்த நாடு இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.