Publish Date: Fri, 12 Sep 2008 (15:23 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (15:22 IST)
தீவிரவாதிகள், பொருளாதார குற்றவாளிகள், இதர குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
குற்றவாளிகள் விவகாரங்களில் பரஸ்பரம் சட்ட உதவி அளிப்பது தொடர்பாக, ஈரானுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் நேற்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.