ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கிஸ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையிருடன் நடந்த கடும் மோதலில் 3 ஹியூஜி தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சிகாம் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அங்கு பதுங்கியிருந்த ஹியூஜி தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை மூண்டதாகவும், இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டுள்ள தீவிரவாதிகளில் இரண்டு பேர் விவரம் சைஃபுல்லா, முகமது அக்பர் என்று தெரியவந்துள்ளதாகவும், மூன்றாவது நபரின் அடையாளம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
மோதல் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.