Publish Date: Thu, 11 Sep 2008 (16:47 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
மணிப்பூரில் தீவிரவாதிகள் 3 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு இம்பால் மாவட்டத்தில் நகருப் பங்கான்தாங் என்ற இடத்தில் நேற்றிரவு, துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் கிடந்த 3 தீவிரவாதிகளின் உடல்களை தகவலின் பேரில் கண்டறிந்து கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக மண்டல மருத்துவ ஆய்வுக் கல்விக் கழகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ ஆய்விற்குப் பிறகே சுட்டுக்கொல்லப்பட்டுள்ள தீவிரவாதிகளின் அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Thu, 11 Sep 2008 (16:47 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)