அன்பும், அமைதியும் செழுமையடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேரள மக்களுக்கும், நாட்டுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஓணம் பண்டிகை கேரள மாநில மக்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், அவர்களின மிக முக்கியமான அறுவடைத் திருநாளாகவும், அன்பின் முக்கியத்துவத்தையும், ஒற்றுமை மற்றும் சகோதர நேயத்தை எடுத்துரைப்பதாகவும் அமைந்துள்ளது.
இந்நன்னாளில் அனைவர் வாழ்விலும் அன்பும், அமைதியும் செழுமையடைய இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஓணம் பண்டிகை நாளை (12.09.08) உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது.