Publish Date: Thu, 11 Sep 2008 (13:04 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
பீகார் மாநிலம் சேகுபுரா மாவட்டத்தில் உள்ள ஹரோஹர் ஆற்றில் இன்று படகு கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பானாபூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கர்மபூஜையில் கலந்து கொண்டு சிவன், பார்வதி சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக படகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பவ்கத் என்னுமிடத்துக்கு அருகே வந்த போது படகு திடீரென கவிழ்ந்தது.
இந்த படகில் சுமார் 40 பேர் பயணம் செய்திருக்கலாம் என்றும், இதுவரை உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.