Publish Date: Tue, 09 Sep 2008 (15:20 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (15:19 IST)
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கங்லிபாக் புரட்சிகர மக்கள் கட்சி என்ற இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதிகள் 5 பேர் பலியாகியுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் பிசென்பூர் மாவட்டத்தில் உள்ள லோக்தக் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 5 பேரும் கங்லிபாக் புரட்சிகர மக்கள் கட்சி என்ற இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மோதல் நடந்து வரும் பகுதிகளில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகும், மோதல் முடிவடைந்த பிறகே முழு விவரத்தையும் தெரிவிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Webdunia
Publish Date: Tue, 09 Sep 2008 (15:20 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (15:19 IST)