மூன்றாவது அணியில் உள்ள இடதுசாரி, பகுஜன்சமாஜ், தெலுங்கு தேசம், காங்கிரஸ் அல்லாத மற்றும் பா.ஜ.க அல்லாத கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று சந்தித்துப் பேச உள்ளனர்.
அப்போது இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்தும், ஜம்மு-காஷ்மீர், ஒரிஸாவில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அவர்கள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
இன்று மதியம் 12.40 மணியளவில் குடியரசுத் தலைவரை அவர்கள் சந்திக்க உள்ளதாகவும், அப்போது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி கட்சிகளுக்கு அளித்திருந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற தவறியதால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் இடதுசாரி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.