அணு சக்தி தொழில் நுட்ப வணிக நாடுகளிடமிருந்து அணு சக்தி தொழில் நுட்பத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும் விலக்கை (Waiver) அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) அளித்துள்ளது. இந்த வெற்றிக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கின் உறுதியான தலைமைக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இன்று தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்க அதிபர் புஷ் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த கண்ணியத்துடன் கையாண்டார் என்றும் அவரது உறுதியான தலைமைக்கு பாராட்டுக்களை அவர் தெரிவித்தார் என்றும் பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.