பீகார் வெள்ளம்- கை கொடுப்போம்!
, சனி, 6 செப்டம்பர் 2008 (19:59 IST)
கடல் சீற்றங்கள், பலத்த மழை, வெள்ளம் ஆகியவை உள்ளிட்ட பேரழிவுகளில் நம்முடன் வாழும் சக மனிதர்கள் பாதிக்கப்படும்போது நமது மனித நேயம் பதைக்கிறது. அந்த சமயங்களில் நாம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவி துன்பத்தைக் குறைக்கிறது என்பது உண்மை. அப்படி ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. நமது நாட்டை ஒரு இயற்கைப் பேரழிவு தாக்கியுள்ளது. பீகாரில் மழை, வெள்ளத்தால் கணக்கிடவியலாத இழப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. நாம் ஏன் அவர்களுடைய துன்பத்தைப் பங்கிட்டுக்கொள்ளக்கூடாது. பாதிக்கப்பவர்களுக்கு உதவும் முயற்சியில் நாமும் இணைய இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். "
நைதுனியா வெள்ள நிவாரணத் திட்டம்" மூலம் நீங்கள் உதவ முடியும். நைதுனியா குழுமத்தின் ஒரு அங்கம்தான் வெப்துனியா என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதால், நீங்கள் வெப்துனியா மூலமும் உதவ முடியும். நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80 (ஜி)ன் கீழ் விலக்கு அளிக்கப்படும். நைதுனியா நிர்வாகமும் அதன் ஊழியர்களும் ரூ.5 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இதில் நீங்களும் பங்கேற்று உங்களின் சமூகக் கடமையை பூர்த்தி செய்யுங்கள்.நைதுனியா நிர்வாகமும் அதன் ஊழியர்களும் ரூ.5 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இதில் நீங்களும் பங்கேற்று உங்களின் சமூகக் கடமையை பூர்த்தி செய்யுங்கள்.உங்களின் கோடிட்ட காசோலையை அல்லது வரைவோலையைக் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள்:Naidunia Bihar relief fund60
/1 Labhchand chajjlani margIndore (Madhya Pradesh) காசோலைகளும் வரைவோலைகளும் "Naidunia Baadh Rahat Kosh" அல்லது "Naidunia Bihar relief fund" என்ற பெயரில் இருக்க வேண்டும்.கூடுதல் விவரம் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: [email protected]