இந்தியாவில் ரூ.1,844 கோடி மதிப்பில் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கான 17 பரிந்துரைகளுக்கு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்த அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இந்த பரிந்துரைகள் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.
ரசாயனம், பெட்ரோ ரசாயனம், வர்த்தகம், பொருளாதார விவகாரம், தொழில் துறை கொள்கை மற்றும் மேம்பாடு, தகவல் ஒலிபரப்பு, மின்சக்தி, நகர்ப்புற மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்காக இந்த பரிந்துரைகள் அனுப்பப்பட்டன.