ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.5 ஆக பதிவாகியுள்ளது.
இன்று காலை 10.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் நீடித்தது. இதனால் குடியிருப்புகள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறியடித்தப்படி தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடிவந்தனர்.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிந்ததாகவும் வானிலை அறிக்கை அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.