Newsworld News National 0809 04 1080904016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வராகப் பதவியேற்றார் வைத்திலிங்கம்!

Advertiesment
வைத்திலிங்கம் புதுச்சேரி முதலமைச்சர் ஆளுநர் கோவிந்தசிங் குர்ஜார்
, வியாழன், 4 செப்டம்பர் 2008 (12:16 IST)
புதுச்சேரி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி. வைத்திலிங்கம் இன்று பதவியேற்றார். அவருடன் 5 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த எளிய நிகழ்ச்சியில் ஆளுநர் கோவிந்தசிங் குர்ஜார், 58 வயதாகும் முதலமைச்சர் வைத்திலிங்கத்திற்கு பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வல்சராஜ், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, நமச்சிவாயம் மற்றும் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். முதலமைச்சர் வைத்திலிங்கமும், புதிய அமைச்சர்களும் ஆளுநருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். இதன் பிறகு அமைச்சர்களுக்கு ஆளுநர் சார்பாக தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.

புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நமச்சிவாயம் (உழவர்கரை தொகுதி), முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை வரலாறு: புதுச்சேரி மாநில முதலமைச்சராக இரண்டாவது முறை பதவியேற்றுள்ள வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்ப ரெட்டியார்- லட்சுகாந்தம் தம்பதியருக்கு மகனாக, 1950-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி மதுக்கரையில் பிறந்தார்.

கடலூரில் தனது பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்த வைத்திலிங்கம், பி.காம் பட்டதாரி ஆவார். ஒழுங்குமுறை விற்பனைக்குழுத் தலைவர், கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை, வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு நெசப்பாக்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார் வைத்திலிங்கம்.

Share this Story:

Follow Webdunia tamil